கொள்ளிடம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

கொள்ளிடம், செப்.11: கொள்ளிடம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் சண்முகர் வீதியை சேர்ந்த சந்திரன் (42). இவர் மாட்டுதரகு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி என்கிற வெண்ணிலா(35). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் சந்திரன் மனைவி வெண்ணிலாவை தினந்தோறும் குடிபோதையில் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த எழிலரசி வீட்டிற்குள்ளே நேற்று தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்த எழிலரசி உடலை கைப்பற்றி, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : suicide ,
× RELATED குடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை