திருக்குவளை, செம்போடை தொழிற் பயிற்சி நிலையங்களில் 16ம் தேதிக்குள் நேரடியாக சேரலாம் கலெக்டர் தகவல்

நாகை, செப்.11:திருக்குவளை, செம்போடை தொழிற் பயிற்சி நிலையங்களில் காலிப்பணியிடங்களில் வரும் 16ம்தேதிக்குள் நேரடியாக சேரலாம்.இதுகுறித்து நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாகை மாவட்டத்தில் உள்ள நாகைப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலையம், திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மணவ, மாணவிகள் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை 16.9.2019 வரை நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நேரடி சேர்க்கை வாயிலாக பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Thirukkuwala ,Sembodaya Vocational Training Centers ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...