ஒருவர் கைது ஸ்மார்ட் சிட்டி பணி மும்முரம் தஞ்சையிலிருந்து கோடியக்கரைக்கு 28 மான்கள் வேனில் அனுப்பிவைப்பு

வேதாரண்யம், செப்.11: ஸ்மார்ட் சிட்டி பணி மும்முரமாக நடப்பதால் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலிருந்து வெளியேற்றப்படும் மான்களை கோடியக்கரை வன உயிரின சரணாலயத்துக்கு அனுப்பும் பணி தொடங்கியது.தஞ்சை பிரகதீஸ்வரர் (பெரிய கோயில்) கோயில் அருகே சிவகங்கை பூங்கா உள்ளது. பூங்காவுக்குள் ஒரு பகுதியில் 41 மான்கள் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டிாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக சிவகங்கை பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த மான்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளன. அதன்படி முதல் கட்டமாக 28 பெண் புள்ளி மான்கள் பாதுகாப்புடன் கூட்டு வேன் மூலம் நாகை மாவட்டம வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை சரணாலயத்தின் மையப்பகுதியான யானைபள்ளம் பகுதிக்கு இரண்டு முறையாக கொண்டு வந்து விடப்பட்டன. இங்கு நடமாடவிடப்பட்ட மான்களை வனத் துறையினர் கண்காணிக்கின்றனர். கண்காணிப்பில் இந்த மான்களின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு சிவகங்கை பூங்காவில் உள்ள மற்ற மான்களும் கொண்டு வரப்பட்டு சரணாலயத்துக்குள் விடப்படவுள்ளன.


Tags : Kochi ,Smart City ,
× RELATED ஆழியாறு 2-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம்