298 பேர் கைது சீர்காழியில் புதுச்சேரி சாராயம் பறிமுதல்

சீர்காழி, செப்.11: சீர்காழியில் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.சீர்காழி திருகோலக்கா தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பாபு (38). இவரது வீட்டின் பின்புறம் புதுச்சேரியிலிருந்து பாக்கெட் சாராயம் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைத்திருப்பதாக சீர்காழி டிஎஸ்பி வந்தனாவுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் 8 சாக்கு மூட்டைகளில் புதுச்சேரி பாக்கெட் சாராயம் 1,800 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாராயத்தை பறிமுதல் செய்து சாராயத்தை பதுக்கி வைத்திருந்த பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரி பழைய பேருந்து நிலையம்...