ராணுவ வீரர் மனைவி தவறவிட்ட ரூ.20 ஆயிரம்

காரைக்கால், செப். 11: காரைக்கால் திருநள்ளாறு சுப்புராயபுரம் பகுதியில் வசிப்பவர் ராணுவ வீரர் விமல். இவரது மனைவி சரண்யா. இவர் சம்பவத்தன்று காலை தனது குழந்தையை அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுவதற்காக மொபட்டில் சென்றார். பள்ளி சென்றபிறகுதான், தான் கொண்டுவந்த பர்ஸ் காணவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, வந்த வழியே மீண்டும் சென்ற பார்த்தபோது, பர்ஸ் கிடைக்கவில்லை. இதனால் கவலையுடன் வீடு திரும்பினார்.

Advertising
Advertising

தொடர்ந்து, இது குறித்து சரண்யாவின் தந்தை சின்னப்பா திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ரோந்துப்பணியில் இருந்த காவலர்கள் ஜான் மற்றும் சதிஷ் ஆகியோருக்கு திருநள்ளாறு காவல்நிலைய எஸ்.ஐ பிரவீன் குமார், தகவல் கொடுத்தார். ரோந்து காவலர்கள் சரண்யா சென்ற வழியில் சென்று பார்த்தபோது, சாலையோரம் அந்த பர்ஸ் கிடந்ததை கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து எஸ்ஐ பிரவீன்குமார், பர்ஸை கண்டெடுத்த காவலர்கள் கையால் அந்த பர்ஸை சரண்யாவிடம் ஒப்படைத்தார்.

Related Stories: