வானூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு பைக்கில் தப்பிய 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

வானூர்.  செப். 11: வானூர் அருகே உள்ள பூத்துறையில் ேநற்று மதியம்  மூதாட்டியிடம் 7 பவுன் செயினை பறித்துச்சென்ற வாலிபர்கள் இருவரை போலீசார்  தேடி வருகின்றனர்.வானூர் அடுத்த பூத்துறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயி. இவரது மனைவி  வசந்தா (60). இவர் நேற்று மதியம் 12.30 மணி யளவில் வீட்டில் தனியாக  இருந்தபோது சோபா பழுது பார்ப்பதாக கூறி இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.  அவர்கள் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் திடீரென மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு அங்கு ஏற்கனவே  நிறுத்தி வைக்கப்படடிருந்த பைக்கில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.இதனால்  அதிர்ச்சி அடைந்த வசந்தா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தும்  பைக் ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. கொள்ளை போன 7 பவுன் செயினின் மதிப்பு  ரூ. 2 லட்சம் இருக்கும். இதுபற்றி வானூர் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும் செயின் பறித்துக்கொண்டு தப்பிய மர்ம ஆசாமிகளை வலைவீசி  தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் மூதாட்டி

யிடம் மர்ம நபர்கள் 7 பவுன் செயினை பறித்துச்சென்ற சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertising
Advertising

Related Stories: