சாலை போடும் பணியால் உளுந்தூர்பேட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

உளுந்தூர்பேட்டை,  செப். 11: உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் அஜீஸ்நகரில் இருந்து ஷேக் உசேன்பேட்டை வரையில் சாலை  போடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று உளுந்தூர்பேட்டையில் இருந்து  திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில்  செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் விபத்துகள்  ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே இரும்பு பேரல்கள் வைக்கப்பட்டு எச்சரிக்கை  செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தீவிர  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சுமார் 7 கிலோ மீட்டர்  தூரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து  வாகனங்களும் குறைந்த வேகத்தில் சென்றதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலுடன்   காணப்பட்டது.
Tags : Traffic Transfer ,Ulundurpet-Trichy National Highway ,
× RELATED நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்:...