விபத்தில் அரசு நடத்துனர் பலி

நெல்லிக்குப்பம், செப். 11: நெல்லிக்குப்பம் அருகே பி.என். பாளையத்தை சேர்ந்தவர் காமராஜ் (48).  அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு பைக்கில் கடலூரில் இருந்து கஸ்டம்ஸ் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த பைக் காமராஜ் ஓட்டிவந்த பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காமராஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : Government conductor ,accident ,
× RELATED அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து சாலை...