தனித்தனி விபத்தில் 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை, செப். 11:உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைப்பிள்ளை(75). சம்பவத்தன்று இவர் பாதூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செந்தாமரைப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜவேல்(28). இவர் ஜேசிபி வாகன டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று பாதூர் கிராமத்தில் சாலையோரம் பள்ளம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது சாப்பிடுவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 விபத்துகள் குறித்தும் திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜி, சப்இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சடையப்பிள்ளை ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : accident ,
× RELATED அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து சாலை...