அதிக மாணவர்களை ஏற்றி வந்த வேன், ஆட்டோ பறிமுதல்நெய்வேலி, செப். 11: கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவின்பேரில் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் என்எல்சி ஆர்ச் கேட் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக பண்ருட்டியில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி வந்த வேனை மடக்கி சோதனை செய்தார். அப்போது அந்த வேனுக்கு வாகன தகுதிச்சான்று இல்லாதது, சாலை வரி செலுத்தாதது, குழந்தைகளை அதிகமாக ஏற்றி வந்தது போன்ற காரணங்களுக்காக வேனை பறிமுதல் செய்தனர். அதேபோன்று அந்த வழியாக கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களை மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். மேற்கொண்ட வாகனத்தை பறிமுதல் செய்து நெய்வேலி மோட்டார் வாகன அலுவலகம் கொண்டு சென்றார்.Tags :
× RELATED வேன் மோதி முதியவர் சாவு