விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

விருத்தாசலம், செப். 11: விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக்குடல், மேல்பாதி  கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(67), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வயலை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விவசாய  நிலத்தில் உள்ள மின் மோட்டாருக்கு வரும் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்துள்ளது. மின் கம்பியில் மின்சாரம் வருவது தெரியாமல் அறுந்து  கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் தொட்டுள்ளார். இதில் மின்சாரம்  தாக்கியதில் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து  அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற  கருவேப்பிலங்குறிச்சி போலீசார், இறந்து கிடந்த கலியமூர்த்தியின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது சகோதரர் பஞ்சமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Vrithyasalam ,
× RELATED மின்சாரம் தாக்கி வாலிபர் பலி