×

வங்கிகள் இணைப்பு போல் ரேஷன் கடைகளை குறைக்க மத்திய அரசு திட்டம்

நாகர்கோவில், செப்.11:  வங்கிகள் இணைப்பு போல், நாடு முழுவதும் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். குறைந்த பட்சம் 5 கி.மீ. தூரம் வரை சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறினர். தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, மண்ணெண்ணெய் அளவு குறைப்பு திட்டத்தை கைவிட வேண்டும். ரேஷனின் தட்டுப்பாடு இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் பல கட்டங்களாக ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன்படி நாகர்கோவில் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசேரி, ஒழுகினசேரி பகுதி கிளை அமைப்பு சார்பில், வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரேஷன்கடை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல சங்க துணை செயலாளர் வி.எஸ். குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 35 கிலோ இலவச அரிசியை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. ரேஷன் பொருட்களால் தான் பல குடும்பங்கள் வாழ்கின்றன. தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகள் ரேஷனில் கை வைத்தது இல்ைல.  ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைலமையிலான அரசு, ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் மக்கள் விேராத திட்டங்களை ஆதரிக்கிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது தமிழகத்தை வெகுவாக பாதிக்கும். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் முறையாக இல்லாமல் எட்டாக்கனியாகி விடும்.  வங்கிகள் இணைப்பு போல் ரேஷன் கடைகளையும் இணைத்து, பல இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்படும். குறைந்த பட்சம் 5 கிலோ மீட்டருக்கு மேல் சென்று தான் ரேஷனில் பொருட்கள் வாங்க வேண்டி வரும். ரேஷனில் தட்டுப்பாடு இல்லாமல் அரிசி, மண்ணெண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.

மாவட்ட குழு உறுப்பினர் எஸ். அந்தோணி, மாநகர குழு செயலாளர் மோகன்,  நிர்வாகிகள் அசீஸ், நாகராஜன், ராஜநாயகம், பிரான்சிஸ், சொக்கலிங்கம், முருகன், எஸ். அந்தோணி, எங்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஜெருசலேம் புனித பயண நிதியுதவி வழங்கும் திட்ட காலக்கெடு நீட்டிப்புநாகர்கோவில், செப்.10: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடேநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்களில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம்,ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் செப்டம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான காலக்கெடு 30.9.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20’ என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005’ என்ற முகவரிக்கு 30.9.2019-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் / சிறுபான்மையினர் நல இயக்குநரகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,ration shops ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...