திமுக இளைஞரணி கூட்டத்தில் முடிவு திருத்துறைப்பூண்டி பரதநாட்டிய கலைஞருக்கு தொல்காப்பியாவிற்கு கலைஇளமணி விருது

திருத்துறைப்பூண்டி, செப்.11: திருத்துறைப்பூண்டி பரதநாட்டிய கலைஞருக்கு தமிழ்நாடு அரசின் கலைபண்பாட்டுத்துறை சார்பில் கலைஇளமணி விருது வழங்கப்பட்டுள்ளது.2018-2019ம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெறுவதற்கு மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலியகலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டகலைகளில் சிறந்து விளங்கும் 5 கலைஞர்களை சிறப்பு செய்வதற்காக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்பி உள்ளிட்ட முதலிய நாட்டுப்புறக்கலைகள் மற்றும் செவ்வியல் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும்.பின்னர் தேர்வுக்குழுவினரால் 5 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞர்களில் பரதநாட்டியக்கலையில் சிறந்து விளங்கிய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தொல்காப்பியா என்றபரதநாட்டிய கலைஞர் 18 வயதுக்குட்பட்டகலைஇளமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றவிழாவில் தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டு துறை சார்பில் கலெக்டர் ஆனந்த் தொல்காப்பியாவிற்கு கலைஇளமணி விருது மற்றும் பொற்கிழி வழங்கி சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள்மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.விருதுபெற்ற தொல்காப்பியா சமூகஆர்வலர் எடையூர் மணிமாறன், மாவட்ட குழந்தைகள்நலக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Artist ,Thrissur ,
× RELATED துறையூர் காந்தி நகரில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி