திருவாரூர் மாவட்டத்தில் 14ம் தேதி முகாமில் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்

திருவாரூர், செப். 11: திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் மாவட்ட அமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. துணை அமைப்பாளர்கள் ரஜினி சின்னா, பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளர் பைந்தமிழ்பாரி மற்றும் எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, ஆடலரசன், விவசாய அணி மாநில செயலாளர் ஏ கே எஸ் விஜயன், முன்னாள் எம்எல்ஏ அசோகன், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் சங்கர் மற்றும் நகர செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் தேவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் வரும் 14 ம் தேதி நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை முகாமினையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி ,மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு தலா 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இந்த புதிய உறுப்பினர்கள் சேர்ப்பின் போது கட்சியின் நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை கழக பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் குளம் தூர்வாரும் பணிக்காக திருவாரூர் வருகை தந்த மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Tags : camp ,district ,Thiruvarur ,
× RELATED மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம்