கூத்தாநல்லூர் கடைகளில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மன்னார்குடி, செப். 11: கூத்தாநல்லூரில் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையிலான சிறப்பு கண் காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டு பல்வேறு கடைகளில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட ரூ 30 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட் களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.சுற்றுச் சுழலை மாசுப்படுத்தும், நீலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் ஒரு முறை மட்டும் உபயோகப் படுத்தி விட்டு தூக்கி எரியும் 14 வகையான அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை தமிழகம் முழுவதும் கடந்த ஐனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்றியது.மேலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக விற் பனை செய்வது, கிடங்குகளில் சேமித்து வைப்பது, கடைகளின் முலம் பொது மக்களுக்கு விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடு வோருக்கு பறிமுதல் செய்யப் படும் பொருள்களுக்கு ஏற்ப அபதாரம் விதிப்பதோடு நீதி மன்ற நடவடிக்கையும் மேற்கொள்ள படும் எனவும் தமிழக அரசு அறிவித் திருந்தது.இந்நிலையில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அடங் கிய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் கூத்தாநல்லூர் திருவாரூர் மெயின் ரோடு, நேருஜி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 25 க்கும் மேற்பட்ட பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர்.

சோதனையின் போது அக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ 30 ஆயிரம் மதிப்பிலான நெகிழி பைகள், குவளைகள், உறிஞ்சு குழாய்கள், நெய்யாத பைகள் மற்றும் கரண்டி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அப்பொருட்களை நகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கு நகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.பொது மக்கள் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும், பிளாஸ்டிக் ஒழிப்பை ஒரு சமுதாய மாற்றத்திற்கான இயக்கமாக முன் எடுத்து செல்ல வேண்டும். அர சின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன் படுத்தினாலோ கடுமையான அபாரதத்தோடு கூடிய நடவடிக்கை பாரபட்சமின்றி எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED காங்கயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்