வேளாண் அதிகாரி தகவல் தனிவாரியம் அமைக்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப். 11: சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க கோரி திருவாரூரில் நேற்று ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைத்திட வேண்டும், பணியின் போது இறக்கும் ஊழியர்களுக்கு ரூ5 லட்சம் வழங்கிட வேண்டும் ,நெல் கொள்முதலை உடனடியாகத் துவங்கிட வேண்டும், 60 வயது நிறைவடைந்த ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ 6 ஆயிரம் வழங்கிட வேண்டும், பிஎப் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் புண்ணீஸ்வரன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் குணசேகரன் மற்றும் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Tags : labor union demonstration ,agriculture official ,
× RELATED காணும் பொங்கல் தினத்தில் மட்டும் ரூ.3...