×

13ம் தேதி நடக்கிறது கூத்தாநல்லூர் அருகே 40 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் வயலில் சடலத்தை எடுத்து செல்லும் அவலம்

மன்னார்குடி, செப். 11: கூத்தாநல்லூர் அருகே மயானத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை விளைநிலம் வழியாக எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 30க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வடபாதிமங்கலத்தில் இருந்து திருநாட்டியத்தன்குடி வழியாக இக்கிரமத்திற்கு தார் சாலை உள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இப் பகுதியில் சுடுகாடு ஒன்று கட்டப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்து மயானத்திற்கு செல்ல ஏற்கனவே ஒற்றையடி பாதை அளவில் சாலை இருந்த நிலையில் தற்போது சாலை இருந்த இடத்தில் கருவேல மரங் களும், புதர் மண்டியும் காணப் படுவதால் கடந்த பல ஆண்டுக்கலாக சாலை இருந்த இடம் தெரியாமல் போனது. இதனால் சுடுகாட்டிற்கு சென்று வர பாதை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று குமாரமங்கலம் கிராமத்தில் குப்பம்மாள் (65) என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்க செய்ய அருகில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு உரிய சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த முதட்டி குப்பம்மாள் உடலை அவரது உறவினர்கள் விவசாய நிலத்தின் வழியே எடுத்து சென்றனர். தற்போது சம்பா சாகுபடி நேரடி விதைப்பு முடிந்து நெல் விதைகள் முளைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விளை நிலத்தின் வழியே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல நில உரிமையாளரிடம் வாக்குவாதம் நடத்தி ஒரு வழியாக மூதாட்டியின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இறுதி சடங்குகள் செய்ய கைபம்ப் இல்லாததால் தண்ணீர் வசதி இன்றி ஒருமணி நேரம் காத்திருந்து தொலைதூரம் சென்று நீர் எடுத்து வந்து இறுதி சடங்குகளை செய்தனர்.

இதுகுறித்து இறந்த குப்பம்மாளின் பேரன் சுரேஷ் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 40 ஆண்டு காலமாக எங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. கோடைகாலங்களில் கிராமத்தில் யாரேனும் இறந்தால் அருகில் உள்ள வயல்களின் வழியாக உடலை எடுத்து செல்வோம். சாகுபடி காலங்களில் அந்த பாதையையும் பயன் படுத்த முடியாது. முக்கியமாக மழை காலங்களில் யாரேனும் இறந்தால் உடலை சுடுகாட்டிற்கு செல்ல வழியே இல்லை. இத்தகைய மோசமான சூழலில் தான் வாழ்ந்து வரு கிறோம். எனவே எங்கள் கிராமத்தில் இறந்தவர்களின் உடலை சிரமமின்றி சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி, ஈமசடங்கு கூடம், தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கூறினார்.கிராம மக்கள் வேதனை40 ஆண்டு காலமாக எங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. கோடைகாலங்களில்கிராமத்தில் யாரேனும் இறந்தால் அருகில் உள்ள வயல்களின் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் அவலம் உள்ளது.

Tags :
× RELATED உ.பி-யில் சோகம்: பாலியல் வன்கொடுமைக்கு...