மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்

மன்னார்குடி, செப். 11: மன்னார்குடியில் நடைபெற்ற சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 7 ம் ஆண்டு பேரவை கூட்டத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்த த்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.திருவாரூர் மாவட்ட சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்க மன்னை நகர 7 ம் ஆண்டு பேரவை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. பேரவை கூட்டத் திற்கு சங்கத்தின் நகர தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். சிஐடியூ நகர பொறுப்பாளர் அகோரம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் வேலை அறிக்கை யை நகர செயலாளர் அரிகரன் வாசித்தார். இதில் சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் உள்ளிட்டோர் பேசினர்.பேரவை கூட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ தொழிலாளருக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும், பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் நகர பகுதியில் வருவதை தடுக்க வேண்டும், பள்ளி நேரங்களில் நகராட்சி குப்பை வண்டிகள் குப்பை அள்ளுவதை தவிர்த்து மாற்று நேரங்களில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மன்னார்குடியில் இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 அவசர ஆபுலன்ஸ் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

முன்னதாக ராஜகோபால சுவாமி கோயில் அருகிலிருந்து ஆட்டோ தொழி லாளர்கள் பேரவை நடைபெற்ற இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். முன்ன தாக மாவட்ட துணைத்தலைவர் மதியழகன் வரவேற்றார். முடிவில் நகர பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.
சிஐடியூ வலியுறுத்தல்கால சுழற்சிக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாற்றம் செய்திருந்தும் விவசாயிகளின் தேவை அறிந்து பாசன ஆறுகளோடு மாற்றி சுள்ளன் ஆற்றை அமைக்காததால் அந்நியர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட விதத்தில் சுள்ளன் ஆறு இன்று வரை திகழ்கிறது. சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது.


Tags : Federal Government ,
× RELATED அனைத்து அரசு பொது போக்குவரத்து...