×

வாழ்வாதாரத்திற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலங்கைமானில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதான காவலர் குடியிருப்பு

வலங்கைமான்,செப். 11: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிப் பகுதியில் கடந்த 1926ம் ஆண்டு முதல் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது.இக்காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் தங்கும் விதமாக கடந்த 1972ம் ஆண்டு காவல் நிலயத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் தெற்குஅக்ரஹாரம் அருகே பதினைந்து காவலர் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. இவை நீங்கலாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், மற்றும் நான்கு காவலர்கள் தங்கும் விதமாக ஆறு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் சுமார் 45 ஆண்டுகளை கடந்த நிலையில் அக்கட்டிடங்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்து விட்டன. கட்டிடத்தின் கான்கீரிட்டால் ஆன மேல் கூறை அவ்வப்போது பெயர்ந்து விழுகின்றது.கட்டித்தில் உள்ள ஜன்னல்கள் பழுதடைந்து விட்டது. இக்கட்டிடங்கள் வசிப்பதற்கு தகுதியற்றவை என பொதுப்பணித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.தற்போது வலங்கைமான் காவல்நிலையத்தில் ஒரு ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10 பெண் காவலர்கள் உட்பட 20 பேர் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் தங்குவதற்கு போதிய இடமின்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்காவலர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். வலங்கைமான் தாலுகாவில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு தேவையான அரசுக்கு சொந்தமான இடங்கள் இல்லாததால் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், ஊட்டசத்து அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் வலங்கைமான் காவலர் குடியிருப்பு அரசுக்கு சொந்தமான பரந்த பரப்பளவினை ஆக்கிரமித்து தரைத்தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் கூடிய பழுதடைந்த காவலர் குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு குறைந்த பரப்பளவில் தரமான அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தரவேண்டும். மேலும் காவலர் குடியிருப்புக்கு செல்லக்கூடிய சாலைகள் பல ஆண்டுகளாக பேரூராட்சியால் போடப்படாததால் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றது. காவலர் குடியிருப்பை சுற்றி கருவேலமரங்கள் மற்றும் செடிகள் முளைத்து இருப்பதால் காவலர் குடியிருப்பிற்கு அச்சத்துடனே செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இக்குறைகளை களைய அரசு முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED நோய் தொற்று அறிகுறி இருந்தால் அரசு...