தஞ்சை குறைதீர் கூட்டத்தில் 470 மனுக்கள் குவிந்தன

தஞ்சை,செப். 11:தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர்.இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 19 பேருக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிதியுதவியாக அவர்களது குடும்பத்தினரிடம் தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.3.23 லட்சத்திற்கான காசோலை, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களைமாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனம் பயன்படுத்தும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றார்.

Related Stories: