டிரைவர் கைது குறுவட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சேதுபாவாசத்திரம், செப்.11: பேராவூரணியில் நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன் பேராவூரணியில் நடந்த குறுவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 16 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 120 புள்ளிகளுடன் பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சங்கர், உடற்கல்வி ஆசிரியை சுதா ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் (பொ ) பொன்னம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராமமூர்த்தி, சுப்பையன், பள்ளி ஆசிரியர்கள் சுபாஷ்கரன், பட்டதாரி ஆசிரியர் சிற்றரசன், காமாட்சி, பாண்டியன், இந்துமதி, பார்வதிப்ரியா, சீதாலெட்சுமி ஆகியோர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: