மகாமக கலையரங்கில் மரக்கன்று நடும் விழா

கும்பகோணம், செப். 11: தஞ்சை கலெக்டர் அண்ணதுரை உத்தரவின்பேரில் மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் கும்பகோணம் மகாமக கலையரங்கம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் மகாமக அரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நம்மாழ்வார் மன்றம் சார்பில் 500 மரக்கன்றுக்கள் வழங்கப்பட்டு முதல்கட்டமாக நடப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் நகராட்சி முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கர்ராஜ், மணிகண்டன், சாமிநாதன், சமூக ஆர்வலர்கள் சாம்பசிவம், விஸ்வேஸ்வரன், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: