கும்பகோணம் அருகே பைக்கிலிருந்து விழுந்து வாலிபர் பலி

கும்பகோணம், செப். 11: கும்பகோணம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.கும்பகோணம் அடுத்த செட்டிமண்டபம் நடுத்தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன்கள் ரமேஷ் (30), கோபி (28). இதில் ரமேஷ் தனியார் கார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி ரமேசும், அவரது தம்பி கோபியும் பைக்கில் சுவாமிமலையில் நடந்த திருமணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். பாபுராஜபுரம் சாலையில் வந்தபோது சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் இறங்கி ஏறியதால் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.இதில் படுகாயமடைந்த ரமேஷை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைகாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: