ரேஷன் கடைகளில் பொருட்களின் அளவு குறைப்பு கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, செப். 11: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் அளவை குறைத்து வழங்குவதை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்ததை கைவிட வேண்டும். வறுமை கோட்டுக்குகீழ், மேல் என தரம் பிரித்து ரேஷன் பொருட்களை குறைத்து, ரேஷன் கடைகளை மூடும் முடிவை கைவிட வேண்டும். பொது விநியோக திட்ட குளறுபடிகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜீவகுமார், அபிமன்னன், நாகராஜ், மாலதி, மருதமுத்து, செல்வராஜ், உமாபதி, சம்சுதீன், மாதர் சங்க நிர்வாகிகள் வசந்தி, கலைச்செல்வி, வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: