திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்குகள் விபத்தில் 2 பேர் படுகாயம்

திருக்காட்டுப்பள்ளி, செப்.11: திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்குகளி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளையராஜா (39). துவாக்குடியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு பைக்கில் வந்தபோது கல்லணை - திருக்காட்டுப்பள்ளி சாலை கூகூர் பாதை அருகே நிலை தடுமாறி வயலில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் இளையராஜா அண்ணன் குமார் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
Advertising
Advertising

திருக்காட்டுப்பள்ளி அடுத்த நடுக்காவேரி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜூலியர் சீசர் (45). திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு பைக்கில் வந்தார். கல்லணை- திருக்காட்டுப்பள்ளி சாலையில் செய்யாமங்கலம் பஸ்ஸ்டாப் அருகே எதிரில் வந்தபோது எதிரே வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த ஜூலியர் சீசரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் ஜூலியர் சீசர் மனைவி ஜென்ம ராக்னி புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

Related Stories: