வெங்கலபொட்டல் ஆலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா

நெல்லை, செப்.10:  நாஞ்சான்குளம் சேகரம் வெங்கல பொட்டல் சபை சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலய புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. டிஎஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கோவில் பிள்ளை, மாசிலாமணி, ஜெயசிங், சவுந்தர பாண்டியன் ஆகியோரின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நெல்லை சி எஸ்.ஐ. திருமண்டல  பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் தலைமை வகித்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் இறை செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக டி.எஸ் நிறுவனங்களின்  அதிபர்களின் ஒருவரும், ஆறுதலின் நற்செய்தியாளருமான டிஎஸ் ஜெயசிங் முன்னிலை வகித்தார். விழாவில் நாஞ்சாங்குளம் சேகர குரு சாமுவேல் பீட்டர்,  வெங்கல பொட்டல் சபை உதவி குரு பிராங்ளின் ஜோசப் ராஜசிங்,  சுரண்டை தொழிலதிபர் ஸ்டீபன் மற்றும்  வெங் கலப்பொட்டல் சபை மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 25 குழந்தை களுக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: