×

குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க கூடாது

விருதுநகர், செப். 10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஓ.கோவில்பட்டி கிராம வரதராஜா செட் தெருவில் வசிக்கும் தலீத் மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  விருதுநகர் தாலுகா ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், வரதராஜா செட் தெருவில் 50க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளம் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், குடியிருப்புகளுக்கு அருகே, தனியார் மூலம் கோழிப்பண்ணை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பண்ணை அமைந்தால் கோழிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் குளமும் கோழி கழிவுகளால் மாசடையும். தலீத் மக்கள் குடியிருப்புக்கு அருகில் மனித, கால்நடை கழிவுகளை கொட்டுவது, சுகாதாரக்கேட்டை உருவாக்குவது தீண்டாமை சட்டத்தின்படி குற்றம். எனவே, கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, கோழிப்பண்ணை அமைப்பதை தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : areas ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்