×

காந்தி நினைவு தினத்தையொட்டி அரசு தொடக்கப்பள்ளியில் சுகாதார பயிற்சி வகுப்பு

தொண்டி, செப். 10: காந்தியடிகளின் 150வது நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் கடந்த சில நாள்களாக சுத்தம், சுகாதாரம், தண்ணீர் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.    மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் சுத்தம், சுகாதாரம், தண்ணீர் பயன்பாடு, தன்சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுகாதார துறை, அங்கன்வாடி பணியானர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுப்புறம், வீதிகள், பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வாறு தூய்மையை பேன வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து தன் சுத்தம், கை கழுவும் விதம், தண்ணீர் சிக்கன பயன்பாடு உள்ளிட்ட செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  சத்து குறைவு மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும், காய்கறி மற்றும் பழங்களின் சத்துக்கள் குறித்தும் மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்கள்  வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கினர். தலைமை ஆசிரியை சாந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ராதா உட்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Government Elementary School ,Gandhi Memorial Day ,
× RELATED காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு...