கல்லூரி கூடைப்பந்து போட்டி விருதுநகர் அணி சாம்பியன்

திருமங்கலம், செப்.10: மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி திருமங்கலத்தில் நடந்தது. பிகேஎன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த போட்டிகளை பிகேஎன் தலைவர் விஜயராஜன் துவக்கி வைத்தார். திருமங்கலம், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பல சுற்றுகள் நடந்த போட்டியில் இறுதி போட்டியில் பிகேஎன் கல்லூரியும், விருதுநகர் செந்தில் நாடார் கல்லூரியும் மோதின. இதில் விருதுநகர் கல்லூரி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பிகேஎன் கல்லூரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார். பொருளாளர் அசோக், முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர்.

Tags : College Basketball Tournament Virudhunagar Team ,
× RELATED ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்