திருமங்கலத்திற்கு குப்பைகளை அள்ளுவதற்கு 17 பேட்டரி வாகனங்கள்

திருமங்கலம், செப்.10: திருமங்கலம் நகராட்சியில் குப்பைகளை அகற்ற புதிதாக 17 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. திருமங்கலம் நகராட்சி தெருக்களில் குப்பை தொட்டிகள் கிடையாது. இதனால் வீடுகள் மற்றும் தெருக்களில் சேரும் குப்பை, கூழங்களை அகற்ற நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 13 பேட்டரி வாகனங்கள் 3 சிறிய வேன்கள் வாங்கப்பட்டுள்ளன. பெரிய வார்டுகளுக்கு வேன்களும், மற்ற தெருக்களுக்கு பேட்டரியால் இயங்கும் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நகராட்சி சுமார் ரூ.1.70 லட்சத்தில் மேலும் 17 புதிய பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வாங்கியுள்ளது. இந்த புதிய வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. திடக்கழிவு மேலாண்மையின் கீழ் வாங்கப்பட்டுள்ள இந்த பேட்டரி வாகனங்களால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற டிரை சைக்கிள்களை பயன்படுத்த தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் போட நகராட்சி அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: