×

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ஒட்டன்சத்திரம், செப். 10: ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி தோட்டத்து சாலையை சேர்ந்தவர் தம்பிராஜ் (42). விவசாயி. இவர் கடந்த செப்.5ம் தேதி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால்தவறி தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த தம்பிராஜை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தம்பிராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்