ராமானுஜன் கணித மன்ற விழா

பழநி, செப். 10: பழநி அருகே தாழையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் கணித மன்ற விழா நடந்தது. கணிதத்துறை தலைவர் கவிதாமணி வரவேற்றார். தாளாளர் சுப்ரமணி தலைமை வகிக்க, முல்வர் சங்கர்அழகு விழாவினை துவக்கி வைத்தார். திண்டுக்கல் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரியின் இணைப்பேராசிரியர் தனலட்சுமி சிறப்புரையாற்றினார். அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், கணிதத்தின் முக்கியத்துவம், வித்தியாசமாக கற்பிக்கும் திறன், அணுகுமுறைகளைப் பயன்படுத்தி கணிதத்துறை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்பிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கணித பேராசிரியர் சிவனேசன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: