கொடைக்கானலில் தனித்திறன் போட்டி

கொடைக்கானல், செப். 10: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் ‘டேலன்சியா’ என்ற மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தலைமை வகித்தார்.  ஆங்கில துறை தலைவர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், ஆங்கில துறை துணை பேராசிரியருமான முத்து மீனலோசனி வரவேற்றார். ஆங்கில துறை மாணவிகள் ஓவியம், கைவினை பொருட்கள், காகிதப்பூக்கள், பொம்மைகள், மலர்கள், அணிகலன்கள், தையல் வேலைப்பாடுகள், அழகு கலை, பாட்டு, நடனம், கவிதை, கட்டுரைகள் மூலம் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்துறை ஆய்வு மாணவி ஹெலன் ஷீலா நன்றி கூறினார்.

Tags : Kodaikanal ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் படகு போட்டிகள் துவக்கம்