நத்தம் பகுதியில் ஓட்டை, உடைசலுடனே இயங்கும் அரசு பஸ்கள் பயணிகள் அவதி

நத்தம், செப். 10: நத்தம் பகுதியில் ஓட்டை, உடைசலுடனே இயங்கும் அரசு பஸ்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நத்தம் பணிமனையில் இருந்து அழகர்கோவில், திருமலைக்கேணி, திண்டுக்கல், மதுரை எம்ஜிஆர் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் ஓட்டை, உடைசல் காரணமாக தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஒழுகுகிறது. மேலும் அடிக்கடி பஸ்கள் பழுதாகி பாதியிலே நிற்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட பஸ்களை பொதுமக்கள் நலன் கருதி இயக்கி உள்ளது. இதில் நத்தம் அரசு பணிமனைக்கு ஒரு பஸ் கூட வழங்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர் ஆகியோர் பரிந்துரை செய்து, நத்தம் பணிமனைக்கு புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Nattam ,
× RELATED மார்கழி மாதத்தையொட்டி நவகைலாயத்திற்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்