போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த ேபச்சுவார்த்தை உடனடியாக துவங்க வேண்டும் ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்

திருவெறும்பூர், செப்.10: துவாக்குடி அரசு போக்குவரத்துகழக பணிமனை முன் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கண்டன வாயிற்கூட்டம் நடத்தினர். அப்போது 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டுமென வலியுறுத்தினர். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு போக்குவரத்து கழக பணினை உள்ளது. இப்பணிமனையில் ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கத்தினரின் தலையீடு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து நிர்வாகம் செய்வது கிளைமேலாளரா, ஆளும் சங்கத்தினரா என்ற கேள்வியுடன் பணிமனை முன் கண்டன வாயிற்கூட்டம் நடத்தினர். வாயிற்கூட்டத்திற்கு கிளை தலைவர் சுந்தரவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துச்செல்வன், பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் மணி, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் காத்திகேயன், மத்திய சங்க துணைத்தலைவர் சுவாமிநாதன், மத்திய சங்க நிர்வாககுழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வாயிற்கூட்டத்தில் 14வது சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி நியமனத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. ஆளும் கட்சி சங்கத்தினர் நிர்வாகம் நடத்தும்போது கிளைமேலாளர் எதற்கு, 240 நாட்கள் பணிமுடித்த அனைவரையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும். விடுப்புக்கு ஆப்சென்ட் போடகூடாது. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பணத்தை காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன வாயிற்கூட்டம் நடந்தது.

Related Stories: