திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் பல்திறன் மூலப்பொருட்கள் குறித்த கருத்தரங்கு துவக்கம்

திருச்சி, செப்.10: திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் வேதிப் பொறியியல் சார்பில் மின்சக்தி. சுற்றுசூழல் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான பல்திறன் மற்றும் நவீன மூலப்பொருட்கள் குறித்த கருதரங்கு நேற்று துவங்கியது. வருகிற 11ம் தேதி வரை கருத்தரங்கு நடைபெறுகிறது. இக்கருத்தரங்கின் துவக்கவிழாவில் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தின் ஏஎம்டிஇசி பிரிவின் துணைத் தலைவர் (ஆராய்ச்சி) முனைவர். அஹமத் ஃபவுசி இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும் உலகெங்கிலும் உள்ள முன்னணி கல்வி நிலையங்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

துவக்கவிழாவில் கருத்தரங்கின் தலைவரும், வேதிப் பொறியியல் துறைத்தலைவருமான முனைவர் மீரா ஷெரிஃபாபேகம் வரவேற்று பேசினார். அறிமுக உரையாற்றிய பேராசிரியர் அனந்தராமன் துறையின் வரலாறு குறித்தும், கல்வி, தொழில் மற்றும் நிர்வாக துறைகளில் பெரும் பதவிகள் வகிக்கும் இத்துறையின் முன்னாள் மாணவர்கள் குறித்தும் உரையாற்றினார். கல்லூரியின் இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் பேசும் போது 3 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளைக் கூறினார். நாளை (11ம்தேதி) வரை கருத்தரங்கு நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவங்களை சேர்ந்தவர்களின் இரண்டு சிறப்பு உரைகளும், 18 முதன்மையுரைகளும், பங்கேற்பாளர்களின் 123 உரைகளும் இடம்பெறுகிறது.

Related Stories: