×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நகரில் புதிய பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

திருச்சி, செப்.10: திருச்சி பெரியார் நகர் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை அமைச்சர் வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திருச்சியில் நடக்கும் மழைநீர்சேகரிப்பு தொடர்பான மண்டல ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் வேலுமணி முன்னதாக பல்வேறு பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். அதன்படி திருச்சி மாநகராட்சியில், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ், தில்லைநகரில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளையும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அஜந்தா ஓட்டல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார். பின்னர், பெரியார் நகர் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ், ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை அமைச்சர் பார்வையிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சேதுராப்பட்டி கிராம ஊராட்சியில் வேலப்புடையான்பட்டி - குஜிலியான்குளத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியினை அமைச்சர் பார்வையிட்டு, பருவமழைக்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்னர், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மதயானைப்பட்டி கிராம ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டுள்ள, ரூ.8.35 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : city ,city park ,Periyar ,
× RELATED சென்னை திரு.வி.க நகரில் கொரோனாவுக்கு...