இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா

துறையூர், செப்.10: துறையூர் அடுத்த கண்ணனூர் இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. துறையூர் அடுத்த கண்ணனூர் இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. இதில் கல்லூரி செயலர் ஆண்டி தலைமை வகித்தார். முதல்வர் தர் முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரி செயலர் ஆண்டி ஆசிரியர்களின் பணிகள் குறித்தும், மாணவர்களுக்கு தரமான கல்வியை தர ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், கல்வியை தரமாக கற்று தேர்ந்திட மாணவர்கள் எவ்வாறு ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக்கூறி ஆசிரியர்களை கவுரவித்து குறித்து பேசினார். ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: