லால்குடி உப்பாறு-கூழையாற்றில் ஆகாய தாமரை காட்டாமணக்கு செடிகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

லால்குடி, செப்.10: லால்குடி உப்பாறு - கூழையாற்றில் ஆகாய தாமரைம் மற்றும் காட்டாமணக்கு செடிகள் அதிகமாக உள்ளதால் மழைக்காலம் முன்பே அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட பகுதியிலிருந்து மழைகாலங்களில் பெய்து வரும் தண்ணீர் மற்றும் திருச்சி மாவட்டம் சமயபுரம் வலையூர், பாலையூர், எம்.ஆர்.பாளையம் அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதியிலிருந்து வரும் காட்டாற்று தண்ணீர் ரெத்தினங்குடி மதகுமூலம் தடுக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு நாட்காளில் உப்பாற்று மூலம் வடிகாலா வருகிறது. ரெத்தினங்குடி, நரிமேடு, நகர், வழியாக திருமங்கலம் மதகில் தடுக்கப்பட்டு அதனை தொடர்ந்து கூழையாறாக தெங்கால், கொன்னைக்குடி பகுதி விவசாய நிலங்களுக்கு பாசனம் பெறுகிறது.

Advertising
Advertising

இந்த நிலையில் மழை காலங்களில் பெரு வெள்ளப்பெருக்கு வந்தாலும் இந்த உப்பாற்று மூலமாக வடிந்து கொள்ளிடம் சென்றடையும். தற்போது உப்பாற்றில் நகர், நரிமேடு, திருமங்கலம் பகுதியில் ஆற்றின் உள்பகுதி மற்றும் கரை பகுதிகளிலும் காட்டாமணக்கு செடிகள் ஆகாய தாமரைகள் படர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு நாட்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி கரையை கடந்து நகர், திருமங்கலம் பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களில் புகுந்து தொடர்ந்து வடியாமல் நெற்பயிர்கள் அழுகி விடுவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இது மழை காலங்களில் இதுபோல் சாதாராணமாக நடந்து வருகிறது. இதுபோல பிரச்சனைகளை விவசாயிகள் சந்திப்பதற்கு முன்பே தற்போது பாசன வாய்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கபட்டுள்ளது. உடனடியாக ஆற்றில் உள்ள காட்டாமணக்கு, ஆகாய தாமரை செடிகளை அகற்ற பொதுப்பணிதுறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: