தந்தை கண் முன்பே மாணவியை மறித்து பாலியல் தொந்தரவு; 2 பேர் அதிரடி கைது

மேச்சேரி, செப்.10: தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டியப்பட்டியைச் சேர்ந்த 19 வயது மாணவி, திருச்செங்கோடு அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று தனது தந்தையுடன் டூவீலரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தாரமங்கலம் நோக்கி வந்தபோது, மற்றொரு டூவீலரில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் திடீரென வழிமறித்தனர். பின்னர், தந்தையின் கண் முன்பே மாணவியின் துப்பட்டா மற்றும் ஜடையை பிடித்து இழுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து, தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் மோகன்ராஜ்(21), கந்தசாமி மகன் சக்திவேல்(23) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: