செல்போன் உதிரிபாக நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவர் மீது புகார்

திருப்பூர், செப். 10: திருப்பூரில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்தனர். திருப்பூர், அவிநாசி ரோடு, இந்திரா நகர் பகுதியில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனம் செயல்படுகிறது. இந்ந செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தின் துணை மேலாளர் கார்த்திகேயன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் நேற்று புகார் அளித்த புகாரில், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கணக்கு பிரிவில் விநாயக மூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார்.  அவர் கடந்த மார்ச்1ம் தேதி முதல் மே8ம் தேதி வரை வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.3 லட்சத்து ஆயிரம் பணத்தை வங்கில் செலுத்தாமல் கையாடல் செய்து தலைமறைவாகியுள்ளார். எனவே அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: