கடைகளில் திருட்டு 2 பேர் கைது

உடுமலை, செப். 10:   உடுமலை அய்யம்பாளையம்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கசாமி (44). இவர் குடிமங்கலத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 19ம் தேதி இவரது கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து புகுந்த நபர்கள் ரூ.1 லட்சத்து 90ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கம்ப்யூட்டரை திருடி சென்றனர். இதேபோல்,  அருகில் உள்ள மளிகை கடையில் ரூ.1500 மற்றும் பொள்ளாச்சி சாலையில் உள்ள கடையில் ஷட்டரை உடைத்து ரூ.400 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், குடிமங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். நேற்று இது தொடர்பாக, புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலை சேர்ந்த லட்சுமணன் (40), கருப்புசாமி (39) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், பொருட்கள் மீட்கப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: