பனியன் நிறுவனத்தில் திருடியவர் கைது

திருப்பூர், செப். 10:    ஊத்துக்குளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை  சேர்ந்தவர் அப்பாஸ் (30). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள தனியார் பனியன்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பாஸ் ரூ.80 ஆயிரம்  மதிப்புள்ள பனியன் துணிகளை திருடியதாக நிறுவனத்தின் மேலாளர் லாலு வர்கீஸ்  ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில்,  அப்பாஸ் துணிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம்  அவரிடம் இருந்து சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பனியன் துணிகளை கைப்பற்றி  அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: