திருப்பூர் ரயில்நிலைய பஸ் ஸ்டாப்பில் குடிபோதை ஆசாமிகள் மோதல்

திருப்பூர், செப். 10:  திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் குடிபோதையில் ஆசாமிகள் இருவர் மாறி மாறி கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டதால் பள்ளி மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர். இரு பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு, ரயில் நிலைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளி விடும் நேரங்களில் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையை குடிபோதை ஆசாமிகளும், வட மாநில வாலிபர்களும் ஆக்கிரமித்து அமர்ந்துகொண்டு, பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணி அளவில், பள்ளி நேரம் முடிந்து, பஸ் நிறுத்தத்தில், ஏராளமான மாணவ, மாணவியர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த இரு ஆசாமிகளிடையே திடீர் என தகராறு ஏற்பட்டு, அடிதடியாக மாறியது.

Advertising
Advertising

இதில் ஆத்திரமடைந்த ஒரு ஆசாமி, தரையில் கிடந்த கட்டையை எடுத்து, மற்றொரு ஆசாமியை பயங்கரமாக தாக்கினார். இதையடுத்து அடி வாங்கிய நபர் தரையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அடிக்க துரத்தினார். இதை பார்த்த மாணவிகள் அலறி அடித்து ஓடினர். மேலும் பொதுமக்களில் சிலர் அவர்களை அங்கிருந்து சத்தம் போட்டு விரட்டி அடித்தனர்.  இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலை நேரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் குடிபோதை ஆசாமி ஒருவன் அத்துமீறி நடந்தபோது, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி ெகாடுத்தனர். இதையடுத்து சில நாட்கள் மட்டும் போலீசார் காைல மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். தற்போது, ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் மாலை நேரங்களில் போதை ஆசாமிகள் மற்றும் வடமாநில வாலிபர்களில் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆகவே, மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: