திருச்செங்கோட்டில் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, செப்.10: திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், செல்வராஜ், மாவட்ட பொருளாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  யுவராஜ், செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், செல்வராஜ், அம்பிகா,    ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில இளைஞர் இணை செயலாளர் வழக்கறிஞர் துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.இளைஞர் அணி உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டுவது. வரும் 15ம்தேதி திருவண்ணாமலையில்  நடக்கும் முப்பெரும் விழாவில், இளைஞர் அணியினர் திரளாகக் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், ஆர்.சண்முகம், கேகே.சண்முகம், தனராசு, செல்வராஜ், பழனிவேல், பேரூர் செயலாளர்கள் ரமேஷ்பாபு, மணிமாரப்பன், கருணாநிதி, ராமலிங்கம், மகாமுனி, திருமலை, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுந்தர், சரவணன், செல்வம், பாலாஜி, சுரேஷ்குமார்   விவசாயத் தொழிலாளர் அணி ராஜமாணிக்கம், வர்த்தக அணி அமைப்பாளர் கிரிசங்கர்,   உள்ளிட்ட  நகர ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,youth team consultation meeting ,Tiruchengode ,
× RELATED திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது