ஜவுளி நகரங்களுக்கு கூடுதல் ரயில் எம்.பி.,க்கு ‘டீமா’ கடிதம்

திருப்பூர், செப். 10: டீமா சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் திருப்பூர் எம்.பி. சுப்பராயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. திருப்பூர் பின்னலாடை துறையில், 40 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. மேற்கண்ட மாவட்டங்கள் வழியாக கூடுதல் பயணிகள் ரயில் இயக்கினால், திருப்பூரின் தொழிலாளர் பற்றாக்குறை குறையும்.

Advertising
Advertising

திருப்பூரில் மட்டுமே சரக்கு முனையம் இருப்பதால், சரக்கு ஏற்றி இறக்கும்போது, ரயில் பயணிகளுக்கு இடையூறு மற்றும் ரயில் தாமதமும் ஏற்படுகிறது.  இதை தவிர்க்க, வஞ்சிபாளையம், கூலிபாளையம் நிறுத்தங்களிலும், சரக்கு முனையம் ஏற்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலம், திருப்பூர் வழியாக பழனிக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: