சர்வதேச குத்துச்சண்டை போட்டி சேந்தமங்கலம் கல்லூரி மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை


சேந்தமங்கலம், செப்.10: சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கராசு-அமுதா தம்பதியின் மகன் சிவா(20). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மத்திகிரி கோழி இன உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில், கோழி ஆராய்ச்சி படிப்பில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் நேபாளத்தில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 6க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் சிவா, 81 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று 6 சுற்றுகளில்  வெற்றி பெற்று, இறுதி சுற்றில் நேபாள நாட்டு வீரரை தோற்கடித்து, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற சிவாவுக்கு,  ஊர் மக்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Boxing Tournament ,Sethamangalam College Student ,
× RELATED ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை...