நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்


நாமக்கல், செப்.10: நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நேற்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பள்ளி வாரியாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டிய இலவச லேப்டாப்களை வழங்கினார். இவற்றை தலைமை ஆசிரியர்கள் பெற்று, பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகளிடம் வழங்கினார்கள். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பார்வதி, ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். லேப்டாப் மூலம் மாணவ, மாணவியருக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை கற்பிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Government School Teachers ,Namakkal District ,
× RELATED கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன், லேப்டாப் பறிப்பு