சேந்தமங்கலத்தில் இலவச எலும்பு மூட்டு மருத்துவ முகாம்

சேந்தமங்கலம், செப்.10: சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை, சேலம் ஆர்த்தோ மருத்துவமனை மற்றும் மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை இணைந்து இலவச எலும்பு மூட்டு மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு சக்தி தொண்டு அறக்கட்டளை அமைப்பாளர் சாய்பாலமுருகன்  தலைமை தாங்கினார். அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சாந்தி கருணாநிதி, முகாமை தொடங்கி வைத்தார். இதில் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் சதீஷ், சந்தோஷ் தலைமையிலான குழுவினர், பரிசோதனைகள் செய்து இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கினர். மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள, சேலம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்ஐ கங்காதரன், நிர்வாகிகள் செல்வம், பாலமுருகன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Arthritis Camp ,Sandamangalam ,
× RELATED சேந்தமங்கலம் ஒன்றியத்தை திமுக...