ஒதிகுப்பம் ஏரியை தூர்வாரும் பணி

கிருஷ்ணகிரி,  செப்.10:  பர்கூர் ஒன்றியம் ஒதிகுப்பம் ஏரியை தூர்வாரும் பணியை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ நேற்று துவக்கி வைத்தனர். பர்கூர்  ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் 65 ஏக்கர் பரப்பளவில் ஒதிகுப்பம்  ஏரி அமைந்துள்ளது.  குடிமராமத்து திட்டத்தின்கீழ், இந்த ஏரியை ₹5 லட்சம்  மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் மற்றும் பர்கூர்  ராஜேந்திரன் எம்எல்ஏ., ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். பின்னர்  கலெக்டர் கூறியதாவது:  ஒதிகுப்பம் ஏரியில் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் 10 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதாக  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நில அளவைத்துறை, வருவாய்த்துறை, ஊரக  வளர்ச்சித்துறை மூலம், ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்யும்  பணி மேற்கொள்ள  உத்தரவிடப்பட்டுள்ளது.

பர்கூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 165 ஏரிகள், 36 குளங்கள் உள்ளது.  இவற்றில் கன்னிசெட்டி ஏரி, கோவிந்தநாயக்கன் ஏரி, அழகிய புதூர் ஏரி,  கப்பல்வாடி ஏரி, ராயல் ஏரி, பில்லனகுப்பம் ஏரி, லட்சுமிநாயக்கன் ஏரி,  சந்தூர் ஏரி, வெப்பாலம்பட்டி ஏரி, குரும்பன்குட்டை ஏரி, லட்சுமிகவுண்டன்  ஏரி, ஆதிதிராவிடர் குட்டை ஆகிய ஏரிகளிலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ்  தலா ₹5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.  தாய் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 8 ஏரிகளில் தூர்வாரும் பணிகள்  முடிந்துள்ளது. கிரானைட் அசோசியேசன் சார்பில் 3 ஏரிகள் தூர்வாரும்  பணிகள் நடந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில்,  பர்கூர் தாசில்தார் கோபிநாத், ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், பிஆர்ஓ சேகர்  மற்றும் விஸ்வநாதன், சிவா, முத்துராமன்,
விவசாயிகள், கிராம மக்கள்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Lake Othiguppam ,
× RELATED அயோத்தியில் 3 மாதத்தில் ராமர்கோயில்...